World Finance ஆல் 10 ஆவது ஆண்டாக ‘இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக’ செலிங்கோ லைஃப் தெரிவு

Date:

செலிங்கோ லைஃப் 2023 ஆம் ஆண்டில் வேர்ல்ட் ஃபைனான்ஸால் ‘இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்’ எனத் தெரிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக இந்த விரும்பத்தக்க விருது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செலிங்கோ லைஃப் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தகநாமமாக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) தெரிவுசெய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டை நாட்டின் ஆயுள் காப்புறுதிச் சந்தையில் சர்வதேச மற்றும் உள்ளூர் பாராட்டுக்குரிய ஆண்டாக்கியது.

இலங்கையில் இந்த விருதை தொடர்ச்சியாக வென்ற ஒரேயொரு ஆயுள் காப்புறுதி நிறுவனம் செலிங்கோ லைஃப் ஆகும்.

மாஸ்மியூச்சுவல் (அமெரிக்கா) அவிவா (யுகே) கனடா லைஃப் (கனடா) டிஏஎல் (அவுஸ்திரேலியா) சுவிஸ் லைஃப் (சுவிட்சர்லாந்து) சிஎன்பி அஷ்யூரன்ஸ் (பிரான்ஸ்) சைனா லைஃப் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களின் உயர்ந்த நிறுவனங்களில் செலிங்கோ லைஃப் நிறுவனத்திற்கு World Finance விருது வழங்கியுள்ளது.

இன்சூரன்ஸ் (சீனா) மற்றும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் (இந்தியா) போன்றன அந்தந்த நாடுகளில் உள்ள சிறந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களாக 2023 ஆம் ஆண்டு சஞ்சிகையின் விருதுகளில் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தகது.

செலிங்கோ லைஃப் தனது ஒட்டுமொத்த செயல்முறைகள் செயல்திறன் மற்றும் உறவுகளை வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய தொடர்ந்து மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ள நிறுவனமாக World Finance விருது அங்கீகரிக்கிறது.

ஒரு ஆயுள் காப்புறுதியில் underwriting செயல்முறைகள் மற்றும் செயல் முறைகளில் உள்ள செயல்திறன் ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்களை பராமரித்தல் அதாவது ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களின் காப்புறுதி ஆய்வு செய்வது செய்யும் முறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஆயுள் காப்புறுதி அளவு ஒவ்வொரு ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்களுக்கான செலவு ஆயுள் காப்புறுதிகளுக்கான ரிஸ்க் தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை நிறுவனத்தோடு தக்கவைத்துக்கொள்ளும் விகிதங்கள் ஒவ்வொரு உரிமை கோரல்களும் செலுத்த எடுத்துக்கொள்ளும் நேரம் புது வாடிக்கையாளர்களைப் பெற்றுக்கொள்ளும் விகிதம் மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மையைக் காட்டும் காப்புறுதிக் கட்டுப்பண வருமானம் சந்தைப் பங்கு ஆயுள் காப்புறுதி நிதியம் மற்றும் நிறுவனம் பெறும் லாபம் என்பன கருத்திற்கொள்ளப்பட்டன.

2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டதைத் தவிர செலிங்கோ லைஃப் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டின் வருடத்திற்கான சிறந்த வர்த்தக நாமம் மற்றும் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் மற்றும் சுறுசுறுப்பான வர்த்தக நாமம் என மகுடம் சூடப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான SLIM விருதுகளில் ஆண்டின் சிறந்த விருதுடன் ஆண்டின் CSR பிராண்டிற்கான ஒட்டுமொத்த வெள்ளி விருதையும் வென்றது. 2023 ஆம் ஆண்டுக்கான SLIM Kantar மக்கள் விருதுகளில் ஆண்டின் மக்கள் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் என்ற பட்டத்தையும் நிறுவனம் பெற்றது.

2023 ஆம் ஆண்டு இலங்கையின் சர்வதேச வர்த்தக சம்மேளனத்தினால் (ICCSL) அமெரிக்க சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்கள் நிறுவனம் (AICPA) மற்றும் பட்டய நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாகத் தொடர்ந்து 17ஆவது ஆண்டாக முகாமைத்துவ கணக்காளர்களால் (CIMA) பெயரிடப்பட்டது.

அதே ஆண்டில் செலிங்கோ லைஃப் பிராண்ட் ஃபைனான்ஸால் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி பிரிவுகள் இரண்டிலும் ‘இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தகநாமம்’ என்று தரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....