25 ஆண்டு திருமண வாழ்க்கை – கேக் வெட்டி கொண்டாடிய அஜித் – ஷாலினி

Date:

நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தமிழ் பட டிரெண்டிங் ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் ‘ஹிட்’ ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், ஷாலினி இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார்.

அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் – ஷாலினி ஜோடிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஆத்விக்’ என பெயரிட்டனர்.

இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினிக்கு காதல் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்.

மேலும், அஜித் – ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....