ஐபிஎல் தொடரில் ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் அறிமுகம்

Date:

2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. ஒவ்வோரு ஐபிஎல் தொடரின் போதும் புதுப்புது விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது. அதற்கு பதிலாக வேறு ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு “ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்” என பிசிசிஐ பெயரிட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு நடுவர்கள் மட்டுமே தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்த டிவி நடுவரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள்.

டிஆர்எஸ் முறையிலும் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது. அந்தவகையில் இதுவரை டிவி நடுவருக்கும் ஹாக்ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையில் ஒரு வழித்தடமாக இருந்த டிவி ஒளிபரப்பு இயக்குனர், இனி புதிய முறையின் கீழ் ஈடுபடமாட்டார்.

அதன்படி டிவி நடுவர் அமர்ந்து இருக்கும் அதே அறையில் ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். நடுவர் என்ன கேட்கிறாரோ அதை அவர்கள் நேரடியாக ஒளிபரப்புவார்கள். இதில் இதுவரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஹாக்ஐ ஆப்ரேட்டர்கள் எட்டு அதிவேக கேமராக்களை மைதானத்தில் பொருத்தி போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.

டிவி நடுவர்கள் கேட்கும் போது அந்த எட்டு கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் திரையில் காணும் வசதியும் இனி கிடைக்கும். அதன் மூலம் டிவி நடுவர் இனி விரைவாகவும், தெளிவாகவும் தனது முடிவுகளை எடுக்க முடியும். அதே போல, எல்பிடபுள்யூ-வின் போதும் வழக்கமாக அவுட்சைடு லெக் திசையில் பந்து பிட்ச் ஆகி இருந்தால் அதை முன்கூட்டியே ஹாக்ஐ நிறுவன வல்லுநர் கூறி விடுவார்.

இதன் மூலம், டிவி நடுவர் அதை மட்டும் திரையில் காட்டி எல்பிடபுள்யூவை மறுக்க முடியும். அதன் மூலம் அதிக நேரம் ஆவதை தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....