மூன்று கூட்டணி இருந்தாலும் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டியே- எடப்பாடி பழனிசாமி

Date:

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் உள்ளன.

ஆனால் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி. தி.மு.கவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை.

மதுரை எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டியதுதானே. 38 எம்.பிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. – காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....