கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்- ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

Date:

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் – பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 9 ரன்னில் பேர்ஸ்டோவ் நடையை கட்டினார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசி 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்னிலும் தவான் 45 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண்- ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். யாஸ் தயால் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி சாம் கரண் 23 ரன்னில் வெளியேற அடுத்த ஓவரில் ஜிதேஷ் சர்மா 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....