போராடிய விராட்.. பினிஷிங் செய்த டிகே: 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

Date:

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். மேலும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்கால் இந்த ரன்களை பஞ்சாப் அணி எடுக்க முடிந்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். டுபிளிசிஸ் 3, க்ரீன் 3, பட்டிதார் 18, மேக்ஸ்வெல் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி. இதனையடுத்து விராட் கோலி – அனுஜ் ராவத் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.

 

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை ஸ்கெட்ச் போட்டு ஹர்சல் படேல் அவுட் ஆக்கினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி விளாசிய நிலையில் கடைசி பந்தில் கோலி (77) விக்கெட்டை வீழ்த்தினார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் அனுஜ் ராவத் 11 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆர்சிபி அணிக்கு முதல் வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி ஆகும்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....