ஐ.பி.எல் 2024 : குஜராத்-பஞ்சாப் அணிகளிடையான மோதல் இன்று

Date:

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வரும் 17ஆவது ஐ.பி.எல். சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னாள் சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்சஸை பந்தாடியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது. அடுத்த ஆட்டங்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்சிடமும், 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

இதில் தொடக்க வீரர்கள் அணித்தலைவர் ஷிகர் தவான் (70 ஓட்டங்கள்), பேர்ஸ்டோ (42 70 ஓட்டங்கள்) நல்ல தொடக்கம் தந்தாலும், அதன் பிறகு வந்த பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், அணி இலக்கை எட்ட முடியாத நிலையை ஏற்படுத்தியது.

எனவே இன்றைய ஆட்டத்தில் மிடில் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா, ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....