6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ஐதராபாத்

Date:

ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் சர்மா – ஹெட் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவரை தீபக் சாஹர் அவுட் செய்தார். அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

ஹெட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 18 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து கிளாசன் மற்றும் நிதிஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்ஷனா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....