ஐபிஎல் தொடர்: அதிகவேக சதம் பட்டியலில் இணைந்த டிராவிஸ் ஹெட்

Date:

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். 39 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் விளாசினார். 2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே யூசப் பதான் 37 பந்திலும், டேவிட் மில்லர் 38 பந்திலும் சதம் விளாசினர். இவர்களுக்கு அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட் 39 பந்தில் 4-வது இடத்தில் உள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....