ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை- ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்த இர்பான் பதான்

Date:

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை – சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்.

இவ்வாறு பதான் கூறினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....