பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

Date:

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதன் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் நடைபெற்று வருகிறது.

ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) ஒலிம்பிக் போட்டியக்கு தகுதி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்றார் வினேஷ் போகத்.

இதன் மூலம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 33வது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து அன்திம் பன்ஹால்-க்கு அடுத்தபடியாக வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....