சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

Date:

சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

இதற்கிடையில் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ஒரு பீரியாடிக் கதைக்களத்துடன், சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். தக் லஃப் படப்பிடிப்பை முடித்துவிட்டு STR48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்நிலையில் சிம்புவின் 50 – வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. சுதா கொங்கரா தற்பொழுது பாலிவுட்டில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை எடுத்து முடித்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து கொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு சிம்புவின் 50- வது திரைப்படத்தை இயக்குவார் என நம்பப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....