வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

Date:

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.

இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....