கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் இல்லாமல் விளையாடியது எனது அதிர்ஷ்டம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

Date:

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு இரு அணி வீரர்களும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர். மேற்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆண்டர்சனுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களி பதிவிட்டு வருகின்றன.

இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் காயம் இல்லாமல் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டம் என ஆண்டர்சன் கூறினார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:-

இன்று காலை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. இரு அணி வீரர்களும் வரிசையாக அணிவகுத்த நிலையில் எனக்கு உற்சாக வரவேற்பினை வழங்கினர். நான் இப்போதும் என் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறேன். உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 21 வருடங்கள் விளையாடுவது நம்பமுடியாத முயற்சி. அதனால் நான் இவ்வளவு தூரம் முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் எனது வாழ்க்கை முழுவதும் காயம் இல்லாமல் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டமாகும்.

இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை, அதனால் நீண்ட காலமாக அதைச் செய்யக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. டிரஸ்ஸிங் ரூமில் நினைவுகளை உருவாக்குவது பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம், அது நமக்கு மட்டுமல்ல, நம் குடும்பங்களுக்கும் சேர்ந்து தான் என்பதை புரிந்துக்கொண்டேன். ஏனெனில் அவர்கள் உங்களுடன் பயணம் செய்கிறார்கள், என்னால் சில சமயம் வீட்டிற்கு செல்லமுடியாத நிலை இருந்தது. அப்போதும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு நம்பமுடியாத ஆதரவை அளித்து முடிந்தவரை என்னை விளையாட அனுமதித்தனர்.

அவர்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சில அற்புதமான வீரர்களுடன் விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இந்த விளையாட்டில் விளையாடிய சில திறமையான கிரிக்கெட் வீரர்கள் அவர்கள். ஆனால், மிக முக்கியமாக, சில நல்ல மனிதர்கள் மற்றும் சில நண்பர்களை நான் இந்த பயணத்தில் சம்பாதித்துள்ளேன். இத்தனை வருடங்களாக நான் எத்தனை அற்புதமான வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு நம்பமுடியாத பயணம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....