இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

Date:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களை பற்றி சிந்திக்க மாட்டீர்கள். தவறு என்றால் தவறு என்பதை முகத்திற்கு முன்பாக சுட்டிக்காட்ட வைப்பது மூலம், புது எதிரிகள் சிலர் உருவாகலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான இன்பமான நாளாக இருக்கப் போகின்றது. தேவையற்ற நண்பர்கள் உறவுகள் தானாகவே உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள். எதிரி தொல்லைகள் நீங்கும். மனக்கசப்பான சம்பவத்திலிருந்து தப்பித்து விடுவீர்கள். தொழில் வேலை எல்லாம் சிறப்பாக செல்லும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தொழில் வேலை எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வீட்டில் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. அன்றாட வேலைகளில் எந்த பின்னடைவும் இருக்காது. மனது இறை வழிபாட்டில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டு வேலைகள் எல்லாம் சீராக நடந்து முடியும். தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லேசான அலைச்சல் இருக்கும். எடுத்த வேலையில் உடனடியாக வெற்றி கிடைக்காது. சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடிய நாளாக தான் இன்று அமையும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் முதிய முதலீடு செய்ய வேண்டாம். தெரியாத நபர்களுக்கு கடனும் கொடுக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பிரச்சனையாக இருந்த வேலையை கூட சுலபமாக சரி செய்து விடுவீர்கள். புதிய நண்பர்கள் பெரிய மனிதர்களின் நட்பு உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை சச்சரவு நிறைந்த நாளாக துவங்கும். குடும்பத்திலும் சிக்கல்கள் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற நபர்களிடம் அனாவசியமாக பேசாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். பெற்றவர்களின் மனதும் நிறைவாக இருக்கும். வேலையில் தொழிலில் இருந்து வந்த தடங்கல்கள் விளக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வீட்டு விஷயத்தை பற்றி அடுத்தவர்களிடம் அனாவசியமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்திலும் உங்களுக்கு எதிராக சில பேர் செயல்படுவார்கள். இருந்தாலும் கடவுளின் ஆசிர்வாதமும் உங்களுடைய நேர்மை குணமும் உங்களை காப்பாற்றும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் அதிகமாக இருக்கும். இருந்தாலும் பொறுமையை இழக்காமல் இந்த நாளை நகர்த்தி செல்வீர்கள். பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பதை சிந்திப்பீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு என்று கட்டாயம் பொறுமை தேவை. வயதில் மூத்தவர்களை எதிர்த்து பேச வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருந்தால் பிரச்சினை சரியாகிவிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தோடு விவேகம் தான் அதிகமாக இருக்கும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செய்வீர்கள். திறமை வெளிப்படக்கூடிய நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு போனஸ் கிடைக்கும். நிதி நிலைமை உயரும். பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து வேலைகளும் நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கக்கூடிய நாளாக அமையும். மேலதிகாரிகளின் பிரஷர் கொஞ்சம் இருக்கும். நிதி நிலைமை மோசமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேர்மையாக நடந்து கொள்ளவும். எந்த விஷயத்திலும் பொய் சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

வட மாகாணத்தில் இன்று (18) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என...