அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர்!

Date:

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சால்ஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியுள்ளார்.

மன்னர் தனது உரையினை நிறைவு செய்தபோது, அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுயாதீன பெண் செனட் சபை உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அவர் ‘’நீங்கள் எனக்கு மன்னர் அல்ல’’ என சத்தமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரத்த குரலில் சுமார் ஒரு நிமிடம்வரை சத்தமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரை, நாடாளுமன்ற பாதுகாவலர்கள் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

பழங்குடி மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகத் தெரிவித்ததுடன், இது உங்கள் நாடு அல்ல எனவும், நீங்கள் எங்களுக்கு மன்னரும் இல்லை எனவும் கூச்சலிட்டுள்ளார்.

இதன் பின்னர் அரச தம்பதியர்களை வரவேற்கக் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களைப் பிரித்தானிய மன்னர் மற்றும் மகாராணி ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த நாடாக அவுஸ்திரேலியா திகழும் நிலையில், அதன் தலைவராகப் பிரித்தானிய மன்னரே பணியாற்றுகிறார்.

இருப்பினும், அந்த பதவியிலிருந்து மன்னரை நீக்குவது குறித்து அவுஸ்திரேலியாவில் அண்மைக் காலத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....