மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை

Date:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். இந்த கள ஆய்வுப்பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து தொடங்குகிறார். இதற்காக கோவைக்கு வரும் அவர் இன்றும், நாளையும் என 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை  மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வு பணியின் ஒரு அங்கமாக,  முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நில எடுப்பில் இருந்து நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குகிறார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....