மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்

Date:

2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

இந்தநிலையில், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் ‘மெட்டா’ நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும்வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்தது. இதுபற்றி 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.

அதன் இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ (ரூ.7 ஆயிரத்து 120 கோடி) அபராதம் விதித்துள்ளது. ஆனால், போட்டியாளர்களும், வாடிக்கையாளர்களும் எவ்வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....