நலமாக உள்ளேன் சுனிதா விளக்கம்

Date:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலத்தில், ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

அவர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரையும் விட்டுவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது. அவர்களை பூமிக்கு பத்திரமாக மீட்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இவற்றில், சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது, உடல்நிலை குறித்து அவர் கூறியதாவது:

நான் அதே உடல் எடையுடன் தான் இங்கு உள்ளேன். என் உடல்நிலை சீராக உள்ளது. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மைக்ரோ கிராவிட்டி உள்ளதால், உடலில் ஏற்படும் வழக்கமான மாற்றங்கள் காரணமாக எடை குறைந்தது போல் தெரிகிறது. என் உடல்நிலையை பேண, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்.

பளு துாக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் என்னை வலிமையாக்கி உள்ளன. முன்பை விட தற்போது நலமாக உள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....