கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Date:

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(நவ.,27) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்து உள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக, திருச்சி பாரதிதாசன் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நாளை நடக்கவிருந்த இரண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....