கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ராஜகிரிய மொரகஸ்முல்ல ஜனக ரணவக்க மைதானத்தில் நடைபெற்றது.
கொழும்பு மாவட்டத்தின் அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அடங்கிய 06 அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற . இறுதிப் போட்டியில் கேம் ஸ்விங்கர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
போட்டியின் ஆரம்ப நிகழ்வில் வெகுஜன ஊடக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குழுவினரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரைடர்ஸ் அணி 04 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளுக்கு 65 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கேம் ஸ்விங்கர்ஸ் அணி 04 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட்டுக்கு 21 ஓட்டங்கள மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொழும்பு ரைடர்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கேம் ஸ்விங்கர்ஸ் அணியின் ரிஷான் மதுசங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக கொழும்பு ரைடர்ஸ் அணியின் அமலும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு இறுதிப்போட்டியின் ஹீரோவாக கொழும்பு ரைடர்ஸ் அணியின் டிலான் ப்ளெசண்ட்.தெரிவு செய்யப்பட்டார்.