தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படம்…மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா?

Date:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். ‘குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், குபேரா படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தனுஷின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம் இதுவே ஆகும் என கூறுகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....