2 கோடி பார்வைகளை கடந்த ‘லப்பர் பந்து’ படத்தின் ‘சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல்

Date:

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘லப்பர் பந்து’ திரைப்படம்

கடந்த செப்டம்பர் 20 ம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

‘லப்பர் பந்து’ படத்தில் ‘சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடல் ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனா இருவருக்கும் இடையே உள்ள உறவையும் காதலையும் காட்சிப்படுத்தி மிக அழகாக அமைந்துள்ளது. இப்பாடலை பிரதீப் குமார் மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....