பதவிய போகஹாவெவ துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை!

Date:

பதவிய போகஹாவெவ பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பதவிய போகஹாவெவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று முன்னாள் இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் காவல்துறையினருக்கு அனுமதியளித்தது. 

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், அது தொடர்பான உண்மைகளை கெப்பித்திகொல்லாவ நீதவானுக்கு இன்று அறியப்படுத்தினர்.

தற்போது டுபாயிலுள்ள போதைப்பொருள் வர்த்தகரான பிரியந்தவின் திட்டத்தின் படி போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் பெண் ஒருவர் மீது இலக்கு வைக்கப்பட்டது. 

எனினும், குறித்த இலக்கு தவறி உயிரிழந்த பெண் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....