விபத்தொன்றை ஏற்படுத்திய காவல்நிலைய பொறுப்பதிகாரி கைது!

Date:

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கரடியனாறு காவல்நிலைய பொறுப்பதிகாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த காவல் துறை பொறுப்பதிகாரி செலுத்திச்சென்ற ஜீப்வண்டி செங்கலடி கரடியனாறு பிரதான வீதியில் காயங்குடா பகுதியில் வைத்து நேற்று இரவு பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் காயமடைந்த பாதசாரியும் குறித்த காவல்துறை அதிகாரியும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்தநிலையில், காயமடைந்த பாதசாரி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மான்ன இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு பாசிக்குடாவில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்றிரவு விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட கரடியனாறு பொறுப்பதிகாரி மீண்டும் காவல்நிலையத்துக்குத் திரும்பிய போது வீதியில் நடந்துச்சென்ற ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....