சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜை

Date:

பிரபலமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் “ஆக்சன்” படம் மூலம் அறிமுகமானார். ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.

இந்த நிலையில் இவர் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘மாமன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....