கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணயச் சதி நோக்கில், வீரர் ஒருவரை அணுகிய குற்றச்சாட்டில், அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவர் இந்தத் தொடரின் காலி மார்வல்ஸ் அணியின் உரிமையாளராவார்.
அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.




