எஸ்.எஸ்.ராஜமவுலி – மகேஷ் பாபு படத்தின் கதாநாயகி இவரா?

Date:

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘எஸ்எஸ்எம்பி29’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக ரூ. 900 முதல் ரூ.1,000 கோடி செலவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நிறைவடைந்துள்ளதையடுத்து, இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மகேஷ் பாபு துவங்குவார் என்று தெரிகிறது.

இதனையடுத்து, இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை பற்றி அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், தற்போது கதாநாயகி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

தற்போது இவர் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் நிலையில், இது உறுதியாகும் பட்சத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பார். கடைசியாக இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....