ஜாகிர் உசேன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.

Date:

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசேன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜாகிர் உசேன் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ஜாகீர் பாய் சீக்கிரமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆனாலும் அவர் நமக்கு கொடுத்த காலங்களுக்காகவும் அவருடைய கலையின் வடிவத்தை அவர் நமக்கு விட்டுச் சென்றதற்காகவும் நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....