ஜெயம் ரவியின் 34வது திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

Date:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான ‘இறைவன், சைரன்’ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் தற்பொழுது ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் 34-வது (ஜெ.ஆர் 34) படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபல இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்ற உள்ளார் என்றும் அப்டேட் வெளிவந்துள்ளது. இப்படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது.

ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் திங்கள்கிழமை துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜெ.ஆர் 34’ படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் ஜெயம் ரவியுடன் இணையும் 3-வது படம் ‘ஜெ.ஆர் 34’ என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....