‘மழையில் நனைகிறேன்’ படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

Date:

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மழை ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனாலேயே இப்படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான வருகிற 12-ம் திகதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படம் சில காரணங்களால் வெளியாக வில்லை. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படம் வரும் 27ம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....