கொழும்பு – பம்பலப்பிட்டி கடற்கரையில் ”Pilot whale” வகையான திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் இன்று (17) கரையொதுங்கியது.
பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் குறித்த திமிங்கிலம் கரை ஒதுங்கியது.
குறித்த கடற்பரப்பில் நேற்று (16) இரவு பல திமிங்கிலங்கள் சுற்றித் திரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.




