ஒரே நாளில் முகப்பரு நீங்க

Date:

இன்றைய காலத்தில் இளம் வயதில் இருக்கக்கூடிய ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்குமே முகப்பரு பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்கிறது. முகப்பரு பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களுடைய முகத்தின் அழகே பாழாகிவிடும். மேலும் அந்த முகப்பருவால் வலியையும் அனுபவிப்பார்கள். இந்த வலியை நீக்கி முகப்பருவையும் முற்றிலும் நீக்குவதற்கு வீட்டிலேயே சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரே நாளில் முகப்பரு நீங்க

முகப்பரு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல்தான் முகப்பரு வந்துவிட்ட பிறகு நாம் என்னென்ன செயல்களில் ஈடுபடக் கூடாது என்பது மிகவும் முக்கியமே. அந்த செயல்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் முகப்பரு பாதிப்பு அதிகமாகும். மேலும் அதனால் வடுக்களும் உண்டாவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. முகப்பரு என்பது அதிக அளவில் எண்ணெய் பொருட்களை உண்பதாலும், ஹார்மோன் பிரச்சினையாலும் ஏற்படுகிறது. ஒருவேளை இந்த முகப்பரு ஏற்பட்டு விட்டால் அந்த முகப்பருவை தங்களுடைய நகங்களாலோ வேறு எதையும் பயன்படுத்தியோ கிள்ளக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அப்படி கிளினோம் என்றால் அது வடுவாக மாறிவிடும். இப்பொழுது எந்த வழிமுறைகளை செய்து முகப்பருவை நீக்கலாம் என்று பார்ப்போம்.

முதலில் முகப்பருவால் ஏற்பட்ட வலியை குறைப்பதற்குரிய வழிமுறையை பார்ப்போம். இதற்கு ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு ஐஸ்கட்டியை வைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து எடுக்க முகப்பருவால் ஏற்பட்ட வலி குறையும். மேலும் முகப்பரு அமுங்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அடுத்ததாக டீ ட்ரீ ஆயில் என்ற ஒரு எண்ணெய் இருக்கிறது, அந்த எண்ணையை பட்ஸை பயன்படுத்தி நம்முடைய முகப்பருவின் மீது தடவி 20 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி எடுப்பதன் மூலமும் முகப்பருவின் பாதிப்பு குறைய ஆரம்பிக்கும்.

ஒருவேளை டீ ட்ரி ஆயில் இல்லை என்பவர்கள் நாலு சொட்டு எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்தும் தடவலாம் அல்லது உருளைக்கிழங்கு சாறில் பட்டை தூளை கலந்தும் தடவலாம் அல்லது பச்சை பப்பாளியின் சாறையும் எடுத்து முகப்பருவில் தடவி 20 நிமிடம் கழித்து துடைத்து எடுக்கலாம். இப்படி செய்து முடித்த பிறகு இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிது புதினா இலை சாறையும் சேர்த்து நன்றாக கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி படுத்து உறங்க வேண்டும். காலையில் எழுந்து முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தோம் என்றால் முகப்பரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றி முகப்பருவின் பாதிப்பிலிருந்து விரைவில் வெளியே வரலாம். கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான பொருட்களை பயன்படுத்துவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....