இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.
மழையின் குறுக்கீடு காரணமாக குறித்த போட்டி 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 37 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவீந்திரா 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு 256 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




