இன்றைய ராசிபலன் 29 ஜனவரி 2025

Date:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கும். முன்கோபம் அதிகம் வரும். அடுத்தவர்களிடம் பேசும் போது வார்த்தைகள் ரொம்பவும் கடினமாக இருக்கும். வேலை தொழில் எல்லாவற்றிலும் கோபத்தை வெளிப்படுத்தி, இந்த நாளை கடந்து செல்வீர்கள். நிறைய எதிரிகள் உருவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை பொறுமையை கடைப்பிடிக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியாது. பரபரப்போடு சுற்றி திரிவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் அசதி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் ஜாக்கிரதை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். முன்னோர்கள் வழிபாட்டை மனதிருப்தியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நிம்மதியான ஓய்வு கிடைக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்ல படியாக நடக்கும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையை வந்து சேரும். மனதிருப்தியோடு வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாடு செய்வீர்கள். நிதிநிலைமை மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று காலரை தூக்கி விட்டு பெருமையோடு நடக்கக்கூடிய நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளை வெல்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் மேலதிகாரிகளே மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு, உங்களுடைய திறமைகள் வெளிப்படும். நல்லதே நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மையான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக நிதானதோடு சிந்தித்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையையும் தீர்த்து வைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அன்னதானம் பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். வீட்டில் சுபகாரிய தடைகள் விலகும். இறைவழிபாடு செய்வீர்கள். முன்னோர்களின் ஆசிர்வாதமும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரம் தொழில் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும்.

விருச்சிகம்

விருச்சக ராசி காரர்களுக்கு இன்று கையில் எடுத்த வேலை சரியாகவே முடியாது. யாராவது ஒருவர் தடை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சில பல தொந்தரவுகளை எதிர் கொள்ள வேண்டிய நாள்தான் இன்று. கவலைப்படாதீங்க எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கப் போவது கிடையாது. பிரச்சனைகளுக்கு ஏற்ப தீர்வுகளை சிந்தித்து, முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல ஓய்வு கிடைக்கும். வேலையிலும் பெருசாக டென்ஷன் இருக்காது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மனநிறைவாக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். முன்னோர்களது வழிபாடு வீட்டில் சிறப்பாக நடந்து முடியும். மன அமைதி கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகைகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். மூன்றாவது நபர்களின் பிரச்சனையில் மூக்கை நுழைக்காதீர்கள்‌ நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். முடிந்தால் மௌன விரதம் இருங்கள். யார் என்ன கேள்வி கேட்டாலும், பதிலுக்கு தலையை மட்டும் ஆட்டுங்கள் போதும். இன்று மௌனம் மட்டும் தான் உங்களை காப்பாற்றும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். முன்னோர்களது வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்‌. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உற்சாகம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....