நேற்று 21ம் திகதி இரவு கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் விசாரணையின் போது காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரின் மீதும் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது




