இந்தோனேஷிய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

Date:

இந்தோனேஷிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவின் சிக்கன நடவடிக்கையை கண்டித்து, அவரது மாளிகையை முற்றுகையிட்டு நுாற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

ஆசிய நாடான இந்தோனேஷியாவின் அதிபராக, முன்னாள் ராணுவ அதிகாரி பிரபாவோ சுபியாந்தோ கடந்த அக்டோபரில் பொறுப்பேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்த அவர், நாட்டில் நிலவும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த மாதம் உத்தரவிட்டார்.

குறிப்பாக, இந்திய மதிப்பில் 37,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் பள்ளி குழந்தைகளுக்கான இலவச உணவு திட்டத்துக்கு நிதியை மாற்றிவிடும் நோக்கில், சிக்கன நடவடிக்கை தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிரபாவோ பிறப்பித்தார்.

அரசு ஊழியர்கள் பணிநேரங்களுக்கு முன்பாகவே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு அதிரடி மாற்றங்களால் இந்தோனேஷியாவில் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அதிபருக்கு எதிராக திரண்ட போராட்டக்காரர்கள் நாடு முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று திரண்ட போராட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இருண்ட இந்தோனேஷியா என்பதை குறிக்கும் வகையில் கறுப்பு உடை அணிந்து, கையில் தீப்பந்தங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜகார்த்தாவின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜகார்த்தாவைத் தொடர்ந்து, சுரபயாவில் கல்லுாரிகள், பல்கலைகளின் மாணவர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிக்கன நடவடிக்கை தொடர்பான உத்தரவை அதிபர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....