2004 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் அதிகளவானார்கள் தமிழர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஊழலற்ற அரசாங்கத்துக்காக மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய, குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.




