நுவரெலியா மாவட்டம் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – செனன் தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன சில சபைகளைக் கைப்பற்றும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.




