கடமையிலிருந்த பணியாளர்கள் தூக்கம் – ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்!

Date:

கடமையில் கவனக்குறைவாகச் செயற்பட்டதற்காகத் தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பிரதான தொடருந்து நிலையத்தில் தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பொடிமெனிக்கே தொடருந்து, கடமையிலிருந்தபோது இருவரும் தூங்கிவிட்டதால், கண்டி தொடருந்து நிலையத்தில் உள்ள 3ஆவது நடைமேடையை வந்தடைந்தது.

அந்த நேரத்தில் தொடருந்து சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை.

குறிப்பிட்ட நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தொடருந்துடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, தொடருந்து ஓட்டுநரின் திறமையால் தவிர்க்கப்பட்டது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்களின் அலட்சியத்தால் இது நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....