இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Date:

பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்கமுடியாதது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ‘இளையராஜா சிம்பொனி இசைத்து, புதிய சரித்திரம் படைத்துள்ளார்’ என்று மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா பெற்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்தார். அவரிடம், சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் விசாரித்தார்.

இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசியபோது, சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்பும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.

சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:ராஜ்யசபா உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.லண்டனில் சில நாட்களுக்கு முன், ‘வாலியன்ட்’ என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம்.இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....