விண்வெளி To பூமி பயணத்தை தொடங்கிய சுனிதாவின் புதிய வீடியோவை வெளியிட்ட நாசா!

Date:

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார்.

அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய கடந்தாண்டு ஜூன் 5ம் திகதி சென்றனர். அவர்களின் பயணம் 10 நாளாக முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் கடந்த 10 மாதங்களாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.

இந் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார். இந்திய நேரப்படி நாளை (மார்ச் 19) அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தரையிறங்குகின்றனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினரின் 9 மாத பயணம் முடிவுக்கு வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் நிக் ஹாவுக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புகின்றனர். பயணம் தொடங்கி உள்ள நிலையில், அங்கு நடக்கும் நிகழ்வுகளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அந்த வகையில், சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமி திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி. பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்தையும் நாசா நேரடி ஒளிபரப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....