பட்டலந்தை வதைமுகாம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது போன்று தமிழர்கள்மீதான வன்முறைகள் தொடர்பிலும் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் செலவினம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 80 வருடங்களாகத் தமிழர்கள்மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது பொது மக்கள் பலர் உணவின்றி பட்டினியால் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




