யாழில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டி ; பீதியடைந்த மக்கள்

Date:

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது.

இச்சம்பவம் இன்று (23) காலை 10.15 மணியளவில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றது.

கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்துமே இவ்வாறு ஓட்டப் போட்டியில் ஈடுபட்டு மக்களை கதிகலங்க வைத்தது.

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் ஆரம்பித்த போட்டி ஆறுகால் மடம்வரை தொடர்ந்தது.

இதில் கீரிமலை – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சாரதி சமிக்கை விளக்கினை உரியமுறையில் ஒளிரவிட்டு பேருந்துனை செலுத்தியபோதும் காரைநகர் – யாழ் பேருந்து சாரதி சமிக்கை விளக்கினை உரியமுறையில் ஒளிரவிடாது தாறுமாறாக பேருந்துனை செலுத்தியதனை அவதானிக்கமுடிந்தது.

கீரிமலை பேருந்துனை முந்துவதற்கு பலமுறை முயற்சித்த காரைநகர் பேருந்து சாரதி ஆறுகால் மடத்திற்கு பின்பு மெதுவாக சென்றது.

இதனால் பலரை தனியார் பேருந்துகள் ஏற்றாது சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....