சுஷாந்த் சிங் மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்!

Date:

பிரபல இந்திய பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சிபிஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறியுள்ளது.

இதன்படி, நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14, 2020 அன்று தனது மும்பை வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....