விரைவில் புடின் மரணமடைவார்: கணித்து சொல்கிறார் உக்ரைன் அதிபர்

Date:

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மரணமடைவார் என்றும், அதன் பிறகு போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையில் நீண்ட காலமாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது: தற்போது உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா உதவப் போவது கிடையாது. இது பெரிய ஆபத்தானது என நான் நினைக்கிறேன். புடின் மரணமடையும் வரை ரஷ்ய அதிபராக தொடர்வார். உக்ரைனுடன் அவரது நோக்கம் நின்று விடாது. மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாக மோதும் வரை அவரது நோக்கம் இருக்கும்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஒற்றுமையாக இருந்து புடினுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். ஐரோப்பா- அமெரிக்கா கூட்டணியை பார்த்து புடின் பயப்படுகிறார். அதனை பிரிக்கலாம் என நினைக்கிறார். விரைவில் அவர் மரணமடைவார். அத்துடன் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....