திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தின் போது 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ் வேம்படி மகளிர் கல்லுாரியிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு சட்டமாணி பட்டம் பெற்று 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




