பிரதேச செயலக அதிகாரி மீது பெண்ணொருவர் தாக்குதல்!

Date:

திருகோணமலை – புல்மோட்டை பதவி ஸ்ரீபுர, பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக காணியைக் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணமாக அதிகாரி மீது தாக்குதல் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு அதிகாரியிடமிருந்து ஆவணங்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ள அந்த பெண் முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி சிகிச்சைக்காகப் பதவி ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிகாரி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து பிரதேச செயலகத்தின் அனைத்து அதிகாரிகளும் இன்று காலை (27) அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....