இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
லக்னோவில் நடைபெறும் குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




