சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலைகளை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டிருந்தது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




